Wednesday, October 20, 2010

புதிய‌ ப‌ய‌ண‌த்தின் 6 மாத‌ முடிவில்.....



புதிய‌ ப‌ய‌ண‌த்தில் ஆறு மாத‌ங்க‌ள் முடிவில் இன்று ப‌ழைய‌ நினைவுக‌ளை மீட்டி பார்க்கின்றேன்.

April மாத‌ம் ஒரு அழ‌கிய‌ 20 ஆம் திக‌தி. காலை நேர‌த்தோடு எழுந்து ஆய‌த்த‌மாகி தாத்தாவின் ப‌ட‌த்தில் வ‌ண‌ங்கி விட்டு மால‌பே நான் ப‌டித்த‌ SLIIT நோக்கி ப‌ய‌ண‌மானேன்.

ஆம்! அன்று என‌து புதிய‌ வேலையில் சேர்ந்த‌ முத‌ல் நாள். நான் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ க‌ண்ட‌ க‌ன‌வு ந‌னவாகிய‌ நாள். நான் ப‌டித்து முடித்த‌ பின் என‌து க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ இணைய‌ வேண்டுமென்ப‌து என‌து நெடுநாளய‌ க‌ன‌வு. இறுதியாண்டு ப‌ரீட்சை முடிவுக‌ள் வ‌ந்த‌தும் உத‌வி விரிவுரையாள‌ர் ப‌த‌விக்கு நேர்முக‌ தெரிவு ந‌டைபெற்ற‌து. அதிலும் தெரிவானேன்.

முத‌ல் நாள் வேலைக்கு செல்லும் போது ச‌ற்று ப‌ய‌மும் த‌ய‌க்க‌மும் இருந்த‌து. என‌க்கு க‌ற்பித்த‌ பீடாதிப‌திக‌ள் விரிவுரையாள‌ர்க‌ள், உத‌வி விரிவுரையாள‌ர்க‌ளுட‌ன் வேலை பார்க்க‌ வேண்டும் என்று நினைக்கும் போது ச‌ற்று ப‌ய‌மாக‌வே இருந்த‌து. ப‌ல‌வித‌ சிந்தனைக‌ள் க‌ன‌வுக‌ளுட‌ன் சென்ற‌ட‌ந்தேன். ம‌னித‌ வ‌ள பிரிவில் சில‌ ப‌டிவ‌ங்க‌ளை நிரப்பி குடுத்து விட்டு என‌து Head of Departmet sirஐ ச‌ந்தித்து என‌க்குரிய‌ பாட‌ங்க‌ள் என்ன‌ என்று கேட்டுக் கொண்டேன்.

என‌க்கு பிடித்த‌மான‌ (DAA and ST I) இரு பாட‌ங்க‌ளுக்கு உத‌வி விரிவுரையாள‌ராய் ப‌ணிபுரியும் வாய்ப்பு என‌க்கு கிடைத்த‌து. நான் வேலையில் சேர்ந்த‌ நேர‌ம் semester break ஆகையால் கிட்ட‌த்த‌ட்ட‌ 2 மாத‌ங்க‌ளுக்கு பெரிதாக‌ வேலை இருக்க‌வில்லை. ப‌ரீட்சை மேற்பார்வையும் அடுத்த‌ semsterகு ஆய‌த்த‌மாகும் வேலையும் ம‌ட்டுமே இருந்த‌து.

June மாத‌ம் முடிவில் அடுத்த‌ semster ஆர‌ம்ப‌மான‌து. அருமையான‌ 3 மாத‌ங்க‌ள். என் வாழ் நாளில் இனிய‌ நாட்க‌ள் அவை. ப‌ல‌ வித‌மான மாண‌வ‌ர்க‌ளை ச‌ந்திக்க‌ நேரிட்ட‌து. மாண‌வ‌ர்க‌ளுட‌ன் வேலை செய்யும் போது நாமும் ந‌ம் க‌ல்லூரிக் கால‌த்தின் ப‌சுமையான‌ நாட்க‌ளை எப்போதும் நினைவு ப‌டுத்திக் கொண்டிருக்கின்றேன். நான் க‌ற்ப்பித்த‌ மாண‌வ‌ர்க‌ள் exams இல் நல்ல‌ ம‌திப்பெண்க‌ள் பெறும் போது மிக்க‌ ம‌கிழ்வ‌டைகின்றேன். அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து feed backs வ‌ரும் போது நான் செய்யும் வேலை சிற‌ப்பாக‌ செய்துள்ளேன் என்ற‌ திருப்தி கிடைக்கின்ற‌து. ஒரு semster முடிவ‌டைந்து விட்ட‌து. நான் க‌ற்பித்த‌ மாண‌வ‌ர்க‌ளுள் எனது ந‌ண்ப‌ர்க‌ள் போல் ப‌ல‌ மாண‌வ‌ர்க‌ளையும் க‌ண்டேன். அவ‌ர்க‌ள் என‌து க‌ல்லூரி ந‌ண்ப‌ர்க‌ளையும் க‌ல்லூரி கால‌த்த‌யும் நினைவு ப‌டுத்தினார்க‌ள்.முத‌லாம் இர‌ண்டாம் வ‌ருட‌ மாண‌வ‌ர்க‌ளில் இர‌ண்டாம் வ‌ருட‌த்தின‌ருக்கு மீண்டும் க‌ற்பிக்க‌ வேண்டிய‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைய‌ போவ‌தில்லை. முத‌லாம் வ‌ருட‌ மாண‌வ‌ர்க‌ளை மீண்டும் அடுத்த‌ வ‌ருட‌த்திலும் ச‌ந்திக்க‌லாம். அவ‌ர்க‌ள‌து semster end exam முடிவுக‌ளில் தான் என‌து க‌ற்பித்த‌லின் பெறுபேறும் தெரிய‌ வ‌ர‌ போகுது. என‌து 6 மாத‌ ப‌ய‌ண‌த்தின் வெற்றி எவ்வாறு அமைய‌ போகின்ற‌தென்ப‌த‌யும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்துள்ளேன்.

என‌து இல‌ட்சிய‌ க‌ன‌வுக‌ள் ந‌ன‌வாகி என‌து ப‌ய‌ண‌ம் வெற்றிக‌ரமாக‌ தொட‌ர‌ தெய்வ‌மாய் இருக்கும் என‌து ஆசை ஐயாவும்(தாத்தா)இறைவ‌னும் அருள் புரிவார்க‌ளாக‌....

Tuesday, May 11, 2010

இன்றும் எங்களுடன் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீங்கள் ஐயா...




அன்று(12/04/2010)காலை அப்பா வந்து ஐயா எங்களை விட்டு போய்விட்டார்
என்று சொன்னதும்
என் செவி வழி கேட்டதைக் கூட என்னால் நம்ப முடியவில்லை...
இது கனவாக இருக்க கூடாத என என் மனம் ஏங்கியது....

அம்மாவும் மாமாவும் யாழ்ப்பாணம் போக வேண்டாம் என்று கூறிய போதும்
வழமை போல் என் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று
என்னை செல்ல வேண்டாம் என்று கூறாது
கவனமாக போய் வா என கூறி என்னை
அன்பாய் கட்டித் தழுவி அனுப்பி வைத்தது
இப்பிடி ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
எம்மைத் தவிக்க விட்டு போவதற்கா?

பிறந்தது முதல் இன்றுவரை எமக்கு எது தேவை என்று
நாம் கேட்கும் முன்னமே எமக்கு எல்லாம் செய்தீங்கள்...
நாம் பள்ளி செல்லும் போது மகிழ்ந்தீங்கள்
பட்டம் பெற்று வேலை செல்லும் போது
பார்த்து ரசித்தீங்கள்....
புது வேலை கிடைத்து விட்டதும் மிக்க மகிழ்ந்தீங்கள்

"எப்ப புது வேலைக்கு போக போறாய்?"
என்று தினம் தினம் கேட்டீர்கள்
ஆனால் இன்று வேலைக்கு செல்லும் போது
பார்த்து மகிழ நீங்கள் இல்லையே ஐயா

தினமும் நான் வேலைக்கு போகும் போது
வாசலருகில் இருந்து "சப்பாடு எல்லாம் எடுத்தாயா?"
என்டு கேட்டு வழியனுப்பி வைப்பீங்களே
இன்று நான் உங்கள் படத்தை வணங்கி விட்டு போறன் ஐயா

நான் இந்த மண்ணில் வந்துதித்த நாள் முதல்
எங்களுடன் பாசமாய் எங்களை அரவணைத்து இருந்து விட்டு
இப்ப இப்பிடி விட்டுட்டு போக உங்களுக்கு எப்பிடி ஐயா மனசு வந்தது...

உங்கட பாசத்தில எப்பவும் வளர்ந்த நாங்கள் இன்று தவித்து போய்ட்டம் ஐயா
எங்கள விட்டு போய் ஒரு மாசம் ஆகிட்டய்யா...

இனி நாங்க யாரை போய் ஐயா ஐயா என்று கூப்பிடுறது?
அபி அபி என்டு நீங்க பாசமா எப்பவும் கூப்பிடுறது
இன்னும் என் காதுகளில் ஒலிக்குது ஐயா

எங்களுக்கு நல்ல தாத்தாவாய் ஒரு நண்பனாய்
ஒரு தந்தையை போல இருந்தீங்க ,,,
இனி என்றும் எங்களுடன் இருப்பது
நீங்கள் எங்களுடன் இருந்த நாட்களின் பசுமையான நினைவுகளே....

ஐயா, நீங்கள் எங்களை விட்டு போனாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் உயிர் உள்ளவரை
எங்களுடன் அழியாமல் இருக்கும்....

மீண்டும் எங்களுக்கு பிறப்பு இருக்குமானல்
நீங்கள் அவ் ஒவ்வொரு பிறப்பிலும்
எங்கள் ஐயாவாக வர வேண்டும்......

உங்கள் ஆத்மா சாந்திக்காக நாங்கள்
எப்போதும் இறைவனை வேண்டி நிற்போம்.....

Saturday, May 1, 2010

கால ஓட்டத்துடன் வாழ்வின் மாற்றம்


கடந்து வந்த பாதையில் 4 வருடங்களைப் பின்னோக்கிப் பார்க்கின்றேன்
SLIIT வகுப்பறையில் நானும் ஓர் மாணவியாக
பரீட்சை மண்டபத்தில் நானும் ஓர் பரீட்சார்த்தியாக

இன்று....

அதே SLIIT வளாகம், அதே வகுப்பறை, அதே பரீட்சை மண்டபம்
ஆனால், என் பாத்திரம் தான் வேறு....
ஆம்,
இன்று வகுப்பறையில் நான் மாணவி அல்ல
மாறாக விரிவுரையாளர்
பரீட்சை மண்டபத்தில் பரீட்சார்த்தியும் அல்ல
மாறாக பரீட்சைகள் மேற்பார்வையாளர்...

காலத்துடன் ஏற்பட்ட மாற்றம் எதிர்பாராதது எனினும்
அடிமனதில் இருந்த அவாக்களில் ஒன்று தான்

காலத்துடன் ஏற்பட்ட இந்த வசந்தமான மாற்றம்
ஒரு புதுவிதமான, பூரிப்பான, வித்தியாசமான அனுபவமும் கூடவே.....