Tuesday, April 12, 2011

எங்கள் ஐயா!!!


ஐயா!
நேற்று போல் உள்ளது... ஆனால்
ஆண்டு ஒன்று சென்றுவிட்டது
நீங்கள் எங்களை விட்டுச் சென்று

உங்கள் அன்பு செல்வங்கள்
இன்று நீங்கள் இன்றி
தவித்து நிற்கின்றோம் ஐயா

அன்பாக நீங்கள் எங்களை
பாசமாக கூப்பிடுவது இன்னும்
தேனாய் எம் காதில் ஒலிக்கின்றது

இனி எப்போது உங்களை
நாம் காணுவோம் ஐயா
தவித்து நிற்கின்றோம் நாம்

உங்கள் பேரக் குழந்தைகள்
உங்கள் பாச செல்வங்கள்
என்றும் உம்மை மறவோம்

எமக்கு நல்ல ஒரு தாத்தாவை
தந்தையாய் நண்பனாய் ஆசானாய்
வழிகாட்டியாக நீங்கள் இருந்தீர்கள்

நீங்கள் எங்கள் மேல் கொண்ட
அன்பு போல நாங்கள் உங்கள் மேல்
கொண்ட அன்பும் என்றும் மாறது

இன்றும் நீங்கள் எங்களுடன்
இல்லை என்று
எங்களால் நம்ப முடியவில்லை

எங்களை விட்டு இறைவன் திருவடி
தேடிச் சென்ற நீங்கள் அங்கு
ஆத்மா சாந்தி அடைவீர்களாக!!!!!

Wednesday, October 20, 2010

புதிய‌ ப‌ய‌ண‌த்தின் 6 மாத‌ முடிவில்.....



புதிய‌ ப‌ய‌ண‌த்தில் ஆறு மாத‌ங்க‌ள் முடிவில் இன்று ப‌ழைய‌ நினைவுக‌ளை மீட்டி பார்க்கின்றேன்.

April மாத‌ம் ஒரு அழ‌கிய‌ 20 ஆம் திக‌தி. காலை நேர‌த்தோடு எழுந்து ஆய‌த்த‌மாகி தாத்தாவின் ப‌ட‌த்தில் வ‌ண‌ங்கி விட்டு மால‌பே நான் ப‌டித்த‌ SLIIT நோக்கி ப‌ய‌ண‌மானேன்.

ஆம்! அன்று என‌து புதிய‌ வேலையில் சேர்ந்த‌ முத‌ல் நாள். நான் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ க‌ண்ட‌ க‌ன‌வு ந‌னவாகிய‌ நாள். நான் ப‌டித்து முடித்த‌ பின் என‌து க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ இணைய‌ வேண்டுமென்ப‌து என‌து நெடுநாளய‌ க‌ன‌வு. இறுதியாண்டு ப‌ரீட்சை முடிவுக‌ள் வ‌ந்த‌தும் உத‌வி விரிவுரையாள‌ர் ப‌த‌விக்கு நேர்முக‌ தெரிவு ந‌டைபெற்ற‌து. அதிலும் தெரிவானேன்.

முத‌ல் நாள் வேலைக்கு செல்லும் போது ச‌ற்று ப‌ய‌மும் த‌ய‌க்க‌மும் இருந்த‌து. என‌க்கு க‌ற்பித்த‌ பீடாதிப‌திக‌ள் விரிவுரையாள‌ர்க‌ள், உத‌வி விரிவுரையாள‌ர்க‌ளுட‌ன் வேலை பார்க்க‌ வேண்டும் என்று நினைக்கும் போது ச‌ற்று ப‌ய‌மாக‌வே இருந்த‌து. ப‌ல‌வித‌ சிந்தனைக‌ள் க‌ன‌வுக‌ளுட‌ன் சென்ற‌ட‌ந்தேன். ம‌னித‌ வ‌ள பிரிவில் சில‌ ப‌டிவ‌ங்க‌ளை நிரப்பி குடுத்து விட்டு என‌து Head of Departmet sirஐ ச‌ந்தித்து என‌க்குரிய‌ பாட‌ங்க‌ள் என்ன‌ என்று கேட்டுக் கொண்டேன்.

என‌க்கு பிடித்த‌மான‌ (DAA and ST I) இரு பாட‌ங்க‌ளுக்கு உத‌வி விரிவுரையாள‌ராய் ப‌ணிபுரியும் வாய்ப்பு என‌க்கு கிடைத்த‌து. நான் வேலையில் சேர்ந்த‌ நேர‌ம் semester break ஆகையால் கிட்ட‌த்த‌ட்ட‌ 2 மாத‌ங்க‌ளுக்கு பெரிதாக‌ வேலை இருக்க‌வில்லை. ப‌ரீட்சை மேற்பார்வையும் அடுத்த‌ semsterகு ஆய‌த்த‌மாகும் வேலையும் ம‌ட்டுமே இருந்த‌து.

June மாத‌ம் முடிவில் அடுத்த‌ semster ஆர‌ம்ப‌மான‌து. அருமையான‌ 3 மாத‌ங்க‌ள். என் வாழ் நாளில் இனிய‌ நாட்க‌ள் அவை. ப‌ல‌ வித‌மான மாண‌வ‌ர்க‌ளை ச‌ந்திக்க‌ நேரிட்ட‌து. மாண‌வ‌ர்க‌ளுட‌ன் வேலை செய்யும் போது நாமும் ந‌ம் க‌ல்லூரிக் கால‌த்தின் ப‌சுமையான‌ நாட்க‌ளை எப்போதும் நினைவு ப‌டுத்திக் கொண்டிருக்கின்றேன். நான் க‌ற்ப்பித்த‌ மாண‌வ‌ர்க‌ள் exams இல் நல்ல‌ ம‌திப்பெண்க‌ள் பெறும் போது மிக்க‌ ம‌கிழ்வ‌டைகின்றேன். அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து feed backs வ‌ரும் போது நான் செய்யும் வேலை சிற‌ப்பாக‌ செய்துள்ளேன் என்ற‌ திருப்தி கிடைக்கின்ற‌து. ஒரு semster முடிவ‌டைந்து விட்ட‌து. நான் க‌ற்பித்த‌ மாண‌வ‌ர்க‌ளுள் எனது ந‌ண்ப‌ர்க‌ள் போல் ப‌ல‌ மாண‌வ‌ர்க‌ளையும் க‌ண்டேன். அவ‌ர்க‌ள் என‌து க‌ல்லூரி ந‌ண்ப‌ர்க‌ளையும் க‌ல்லூரி கால‌த்த‌யும் நினைவு ப‌டுத்தினார்க‌ள்.முத‌லாம் இர‌ண்டாம் வ‌ருட‌ மாண‌வ‌ர்க‌ளில் இர‌ண்டாம் வ‌ருட‌த்தின‌ருக்கு மீண்டும் க‌ற்பிக்க‌ வேண்டிய‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைய‌ போவ‌தில்லை. முத‌லாம் வ‌ருட‌ மாண‌வ‌ர்க‌ளை மீண்டும் அடுத்த‌ வ‌ருட‌த்திலும் ச‌ந்திக்க‌லாம். அவ‌ர்க‌ள‌து semster end exam முடிவுக‌ளில் தான் என‌து க‌ற்பித்த‌லின் பெறுபேறும் தெரிய‌ வ‌ர‌ போகுது. என‌து 6 மாத‌ ப‌ய‌ண‌த்தின் வெற்றி எவ்வாறு அமைய‌ போகின்ற‌தென்ப‌த‌யும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்துள்ளேன்.

என‌து இல‌ட்சிய‌ க‌ன‌வுக‌ள் ந‌ன‌வாகி என‌து ப‌ய‌ண‌ம் வெற்றிக‌ரமாக‌ தொட‌ர‌ தெய்வ‌மாய் இருக்கும் என‌து ஆசை ஐயாவும்(தாத்தா)இறைவ‌னும் அருள் புரிவார்க‌ளாக‌....