
வலைப்பூக்கள் எனக்கு புதிதல்ல. ஆனால் வலைப்பூக்களில் புதிதாக மலர்வதற்குப் புதியவளே. :)
இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் எனது நண்பி பாவை எழுதிய வலைப்பூவைப் பார்த்தேன். மிகவும் அற்புதமாக எழுதப்பட்டு இருந்த அந்த வலைப்பூ பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்து இருந்தது.
அப்பொழுது நான் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டு இருந்தேன். நிறைய நேரம் மீதமாக இருந்த காலம் அது. பொழுதுபோக்காகப் பதிவுகள் இடலாம் என்று எண்ணி நங்கை எனும் வலைப்பூவினையும்(ஆங்கிலத்தில்) கஸ்தூரி எனும் வலைப்பூவினையும்(தமிழில்) எழுத ஆரம்பித்தேன். அதன் பின் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் வழமை போல் நேரம் எனக்கு எதிராக சதி செய்தது. எழுதுவதற்கு கிடைக்கும் நேரம் குறைந்தது. அவ்வப்போது நங்கையில் பதிவுகளை இட்டு வந்தேன். கஸ்தூரியின் மலர்ச்சி அப்போது கைகூடவில்லை.
பின்பு அண்மைக் காலமாக சில வலைப்பூக்களை இரசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. அருமையான பதிவுகள் பலவற்றை வாசிக்க முடிந்தது. வலைப்பதிவு எழுதும் ஆர்வம் மீண்டும் என்னுள் துளிர்விட்டது. ஆனாலும் இறுதி ஆண்டுப் பரீட்சை மற்றும் Project வேலைகள் காரணமாக அது உரம் போடுப்படாமல் விடப்பட்டது. தற்போது அவை எல்லாம் முடிந்து, வெட்டியாக இருக்கும் காலம். எனவே மீண்டும் பதிவுகளை இடலாம் என்று எண்ணி முதலாவது கிறுக்கலை ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து எழுத இறைவன் அருள் புரிய வேண்டும்.
பி.கு: பதிவுலக எழுத்துக்கு புதிதாகையால் பிழைகள் இருப்பின் மன்னித்து, தவறுகளை சுட்டிக் காட்டவும்.
12 comments:
புதிதாக இன்னும் ஒரு பூ.. வாழ்த்துக்கள் ஆரபி..
அழகான பெயர்..
வாழ்த்துகள்...!
வாழ்த்துக்கள்.
இந்தப்பூ வாடாமல் என்றும் பூக்க வேண்டும்.
மலர எத்தனிக்கும் வலைப்பூவே மலர்ந்து மகரந்தமாகி காய் கனிகளுடன் பொழிய வாழ்த்துக்கள்...
நன்றி சுபானு, நிமல், ராஜேந்திரம் மற்றும் Thinks Why Not....
உங்கள் வாழ்த்துக்கள் பல பூக்கள் மலர ஊக்கம் தருகின்றது
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாங்கோ..வாங்கோ..
உங்களை வலையுலகிற்கு வரவேற்ப்பதில் மகிழ்ச்சி... :)
தொடர்ந்து எழுதுங்கோ.
WORD VERIFICATION நீக்கி விட்டால் பின்னூட்டம் இட இலகுவாக இருக்கும்.
Btw Abarnah is this only for your tamil friends? I'm so sad to see this from you ;(
add ur blog in இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்
best of luck akka...
மிக்க நல்ல முயற்சி, முயற்சி தொடர வாழ்த்துக்கள்
ராஜா யுகன்
அச்சு, வேந்தன், பிறேம், ராஜா யுகன் பின்னூட்டங்களிற்கு நன்றி.
WORD VERIFICATION நீக்கி விட்டேன். :)
Dilanka dn't worry. My english blog is available on http://nangai.blogspot.com :)
Post a Comment