
வியர்க்க விறுவிறுக்க
அலுவலகத்தில் இருந்து
இடைவேலை நேரத்தில்
பனிசும் வாழைப்பழமும்
தினமும் வாங்கி வந்து தந்தீர்
என்னை விட கனமான
புத்தகப் பையை சுமப்பதற்காக
பாடசாலை வாயில் அருகில்
தினமும் காத்து இருந்தீர்கள்
குச்சி ஐஸ் வாங்கித் தந்து
அதனை நான் உண்ணும் போது
எனது கண்ணில் தென்படும்
ஆனந்தத்தைக் கண்டு உள்ளம் பூரித்தீர்
அப்பாவிற்குத் தெரியாது
திருட்டுத் தனமாக செலவுக்கு
பணத்தை என் கையில் தந்தீர்
வாழ்க்கையில் நான் வீழ்ந்த
ஒவ்வொரு நொடிப்பொழுதிலும்
தோள் சாயத் தோள் கொடுத்து
ஆறுதலாய் இருந்தீர்
தலையைத் தூக்கிப்
பார்த்த போது
ஏதோ சொல்ல உதடுகள் துடித்தன
ஆனால், கருமையான கண்களில்
கண்ணீர் ஆறு மட்டுமே பெருக்கெடுத்தது
நான் எனது மகளுடன் ஆசையுடன்
அம்மாவைப் பார்க்க வந்துள்ளேன்
பரிசுகள் கொடுத்து ஆசி பெற
காலில் வீழ்ந்தேன்
ஆனால் என் தலையை உங்கள்
கைகளால் வருடவும் இல்லை
கண்ணீரால் என் தலை
நனையவும் இல்லை
ஏதோ ஒன்றை வெறித்துப்
பார்த்த வண்ணம் இருந்தீர்கள்
முன்பெல்லாம் நான் போக
ஆயத்தமாகும் போதெல்லாம்
என்னுடன் நெடுந்தூரம் வந்து
என் கைகளைப் பற்றிப் பிடித்து
"சென்று வா மகளே" என்று கூறியவர்
இன்று என்னை யாரென்றே
தெரியாதவர் போல்
வேறெங்கோ பார்த்த வண்ணம் இருகின்றார்
என்னுள் தேக்கி வைத்திருந்த
கண்ணீர் ஆறு என்னையும்
மீறிப் பெருக்கெடுத்தது
கார் கதவைத் திறந்து கொண்டு
வெளியே பாய வேண்டும்
போல் மனதில் வேதனை
என்னை வாட்டியது
கார் சீட்டில் தலை சாய்த்து
தோம்பி அழ மட்டுமே முடிந்தது
எனது பாச முள்ள அம்மா
இன்று சுயநினைவு இழந்து விட்டார்
என்னை அடையாளம் காண
முடியாதவராகி விட்டார்
கண்ணை இமை காப்பது போல
என்னைக் காத்த என் அம்மாவை
அன்போடு பார்த்துக் கொள்ள
இன்று என்னால் முடியாது
போய் விட்டது
நானும் இன்றைய இயந்திர
வாழ்வு வாழும் உலகில்
ஓர் சராசரி
இயந்திரமாகி விட்டேன்
மனதுள் சொல்லனா வேதனைகள் கோடி
என்னை அணு அணுவாகத்
துளைக்கின்றது
வேதனைகள் என்னை வாட்ட
கணம் கணம் நான்
மரணிக்கின்றேன்
பி.கு: அண்மையில் எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகோதரி ஒருவர் எனது அப்பா எனும் தலைப்பில் ஓர் ஆக்கத்தை மின்னஞ்சல் செய்து இருந்தார். அதை வாசித்ததும் எனக்கு அதனை எனது மற்றைய நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது. காரணம் அந்த ஆக்கம் என்னை மிகவும் பாதித்து இருந்த்தது. அதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பதிந்து உள்ளேன். இதனை சகோதர மொழியில் Ron Silva அவர்கள் எழுதி உள்ளார்.
எனது அப்பா எனும் ஆக்கதில் வரும் தந்தை கதாபாத்திரத்தை ஓர் தாய் கதாபாத்திரமாக மாற்றியுள்ளேன். காரணம், எனது தாய் இன்று வரை எனக்கு செய்தவை போன்ற உணர்வு இதனை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது.
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
19 comments:
அருமை....
/*...இயந்திர
வாழ்வு வாழும் உலகில்
ஓர் சராசரி
இயந்திரமாகி விட்டேன்...*/
யதார்த்த வாழ்வில் நாம் தெரிந்தே தொலைக்கும் தருணங்கள்....
சின்ன திருத்தம்..
/*...
அம்மாவிற்குத் தெரியாது
திருட்டுத் தனமாக செலவுக்கு
பணத்தை என் கையில் தந்தீர்...*/
"அப்பாக்கு தெரியாமல்" என வந்திருக்க வேணும் என்று நினைக்கிறேன்...
nice one
i like this post.
very touching.
//யதார்த்த வாழ்வில் நாம் தெரிந்தே தொலைக்கும் தருணங்கள்....
//
ஆம் உண்மை தான். இதைப் பார்த்ததும் என் வாழ்விலும் இவ்வாறு நினைக்க வைக்கும் தருணம் வரக் கூடாது என்று வேண்டுகின்றேன்.
அது "அப்பா" என்று தான் வந்திருக்க வேண்டும். திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி...
@Rajendram :
Thanks, I was almost in tears when I read it for the first time :(
I could not stop a tear drop coming out when i finish reading it....
Sensitive one.
I was also so upset after reading it. Infact my parents have done more than this to me endu ninaikeka felt so sad :(
very nice share...keep it going
very sensitive post.nalla irukku
’வேதனைகள் என்னை வாட்ட
கணம் கணம் நான்
மரணிக்கின்றேன்....’
அருமையான,என்னை கவர்ந்த வரிகள் !
நல்லதொரு ஆக்கம் ....
மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
நன்றி பிருந்தா, அண்ணாமலையான்... :)
அன்புடன் அழைக்கிறேன்..
www.annamalaiyaan.blogspot.com
உங்களை பாதித்த ஒரு விஷத்தை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் உங்களின் எண்ணங்களுக்கு முதலில் என் பாராட்டுகள்...உங்களின் எழுத்து நடையில் நல்லா தெளிவு இருக்கிறது...உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...
Thanks vasanth and Ratha :)
@Kamalesh
நன்றி வாழ்த்துக்களுக்கு....
தொடர்ந்தும் எழுத முயற்சிக்கின்றேன் :)
இன்றுதான் இதைப் பார்த்தேன் நன்றாக இருக்கின்றது.. வாழ்த்துக்கள் ஆரபி.. :)
சுபானு வாழ்த்துக்களுக்கு நன்றி :)
சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments
மீண்டும் விழிவழியே நீர்த்துளிகள் கசிகின்றன. அருமையான ஒரு கடிதம்
Post a Comment