
கடந்து வந்த பாதையில் 4 வருடங்களைப் பின்னோக்கிப் பார்க்கின்றேன்
SLIIT வகுப்பறையில் நானும் ஓர் மாணவியாக
பரீட்சை மண்டபத்தில் நானும் ஓர் பரீட்சார்த்தியாக
இன்று....
அதே SLIIT வளாகம், அதே வகுப்பறை, அதே பரீட்சை மண்டபம்
ஆனால், என் பாத்திரம் தான் வேறு....
ஆம்,
இன்று வகுப்பறையில் நான் மாணவி அல்ல
மாறாக விரிவுரையாளர்
பரீட்சை மண்டபத்தில் பரீட்சார்த்தியும் அல்ல
மாறாக பரீட்சைகள் மேற்பார்வையாளர்...
காலத்துடன் ஏற்பட்ட மாற்றம் எதிர்பாராதது எனினும்
அடிமனதில் இருந்த அவாக்களில் ஒன்று தான்
காலத்துடன் ஏற்பட்ட இந்த வசந்தமான மாற்றம்
ஒரு புதுவிதமான, பூரிப்பான, வித்தியாசமான அனுபவமும் கூடவே.....
5 comments:
அடி மனதின் ஆசைகள் நிஜம் ஆகும் அந்த நிமிடம்... அந்த நிமிடத்தை அந்த நிமிடத்தின் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது....
வாழ்த்துக்கள் ஆரபி... :)
//அந்த நிமிடத்தை அந்த நிமிடத்தின் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது....
//
உண்மை தான்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
கடவுளின் ஆசி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.. அப்படி அவரால் மனதார வாழ்த்தப்பட்டு பரிசளிக்கப் படுகின்றவர்கள் மிகச்சிலரே... காலத்தால் ஏற்றபட்ட மாற்றம் என்று நீங்கள் கூறினாலும் அது உங்களின் திறமைக்கு கோவிலில் இருக்கும் அவன் தந்த பரிசு.
புதுப்புது அனுபவங்களை நோக்கி இந்த புதிய காலடி உங்களை அழைத்துச் செல்லும்.. ஏற்படும் அனுபவம் இனிப்போ கசப்போ ஒவ்வொன்றையும் அனுபவித்து இரசியுங்கள். எப்போதும் சந்தோசமாக இருக்க அது உங்களை வழிநடத்தும்.
எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஆரபி..
//ஏற்படும் அனுபவம் இனிப்போ கசப்போ ஒவ்வொன்றையும் அனுபவித்து இரசியுங்கள்.//
நிச்சயமாக இரசிக்க முயற்சிக்கின்றேன்....
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுபானு
// அதே SLIIT வளாகம், அதே வகுப்பறை, அதே பரீட்சை மண்டபம்
ஆனால், என் பாத்திரம் தான் வேறு....
ஆம்,
இன்று வகுப்பறையில் நான் மாணவி அல்ல
மாறாக விரிவுரையாளர்
நிச்சயமாக உங்களின் திறமைக்கு ஏற்ற பணி !! பல்லாண்டு காலம் அதில் பணிபுரிந்து உங்களைப் போன்ற திறமையான பலரை உருவாக்குவதற்க்கு வாழ்த்துக்கள் !!! :P
Post a Comment