Wednesday, October 24, 2007
பசுமையான நினைவுகள்
பாடசாலை வாழ்க்கை முடிந்து இற்றைக்கு எறத்தாழ இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. இன்று மீண்டும் பாடசலைக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. பாடசாலையில் விழா ஒன்று நடைபெற்றது. அதற்கு பழைய மாணவர்களையும் இம்முறை அழைத்து இருந்தார்கள். எனது பழைய நண்பி ஒருவரையும் இன்னும் சிலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. மிக்க சந்தோஷமா இருந்தது. முந்தி நாங்க பாடசாலைல படிக்கிற போது அப்பப்பா எவ்வளவு கட்டுப்பாடுகள். ஆனால் இப்ப எல்லாம் மாறியாச்சு. காலத்தோட தங்களும் மாறுகிறோம் என்று சொல்ர மாதிரி இருந்தது. பாடசாலை முன்னேறுகின்றது என்டு ஒரு பக்கம் சந்தோஷம் தான், ஆனாலும் இந்த சுதந்திரமும் அனுமதிகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லயே என்று சிறிய வருத்தமும் தான். ஆனாலும் அங்கு சென்று வந்த பிறகு பாடசாலை வாழ்க்கை இனி திரும்பி வராதா என்ற ஏக்கம் மனதைப் பற்றிக் கொண்டது. நாங்கள் படிக்கும் போது சின்ன பிள்ளைகளாக இருந்தவர்கள் எல்லாம் இப்ப A/L. இன்னும் அவர்கள் எங்களை மறக்காமல் வந்து அக்கா என்ன செய்றீங்க, என்ன படிக்கிறீங்க, எப்படி இருக்கிறீங்க என்டு கேட்ட போது அவர்கள் இன்னும் எங்களை மறக்கவில்லை என்று மிக்கம் மகிழ்சியாக இருந்தது. விழா முடிந்து வீடு திரும்பும் போது நானும் எனது நண்பியும் பாடசாலை வாசலில் நின்று எமது பாடசாலை வாழ்க்கயை மீட்டு பார்த்துவிட்டு சற்று கவலையுடனும் மிக்க மகிழ்சியுடனும் வீடு திரும்பினோம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//பாடசாலை வாழ்க்கை முடிந்து இற்றைக்கு எறத்தாழ இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது.//
நான் நினைச்சன் ராஜராஜசோழன் காலத்து ஆளாக்கும் நீங்க என்று..
Just Kidding..
:)
தங்கச்சீ.. கொஞ்சம் பந்தி பிரிச்சு எழுதுங்கோ.. வாசிக்க இலகுவாக இருக்கும்..
சரி அக்கா.
இது எனது முதல் பதிவு ஆகையால் தவறுகளை மன்னிக்கவும். இனிமேல் திருத்திக் கொள்கின்றேன்.
பின்னூட்டலுக்கு நன்றி
dont understand tamil
நீங்கள் இரு ஆண்டுகள் முன்பு அனுபவித்த பிரிவின் வலியை நான் இன்று உணர்கின்றேன் ...
வித்திட்டு வளர்த்த பள்ளிதனை என்றும் மறவோம் !
Post a Comment